Thursday, August 11, 2011

ஒரு நட்பின் புன்னகைக்கு உதடுகள் தேவையில்லை இதயம் போதுமே!!!



அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட .................

Monday, August 8, 2011

சிந்திக்க சில துளிகள்.....

















நண்பர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்....

Friday, August 5, 2011

கணணி பயன்பாடுகளை வேகமாக திறக்க

கணணி என்றாலே வேகம் என்றுதான் பொருள், இப்படி இருக்க கணணியில் இருக்கும் பயன்பாடுகளை அணுகுவதில் மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் என்று நம்மில் பலர் நினைப்பீர்கள்.
ஒரு சிலர் கணணியில் உள்ள பயண்பாடுகளை வேகமாக அணுகுவதற்கு டாஸ்க்பாரில் ஐகானை செட் செய்து வைத்திருப்பார்கள். இதில் ஒரு சில பயன்பாடுகளை மட்டுமே பெற முடியும். சிஸ்ட்டம் ட்ரேயில் இருந்தவாறு பல்வேறு விதமான பயன்பாடுகளை பெற ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. இதன் மூலம் நாம் விரைவாகவும் எளிமையாவும் பயன்பாடுகளை பெற முடியும்.


அற்புதங்கள் பல படைக்கும் களுதாவளை பிள்ளையார்




மூல மூர்த்தியாக சிவலிங்கத்தைக் கொண்டு பிள்ளையாரை வழிபாடு செய்யும் திருத்தலங்கள் இந்த உலகிலேயே மிக அரியதாகவே காணப்படுகின்றன.இந்த வரிசையில் அற்புதங்கள் பல படைக்கும் புதுமையான திருத்தலமாக விளங்குவதுதான் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம்.

பேஸ்புக்கிலிருந்து விலகிய மார்க் ஸூக்கர் பேர்க்கின் சகோதரி: கூகுள் + உடன் இணைவாரா? _

 பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸூக்கர்பேர்க்கின் சகோதரியும், அச் சமூகவலையமைப்பின் சந்தைப்படுத்தல் இயக்குநருமான ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரெண்டி ஸூக்கர்பேர்க் தான் வேறு ஓர் ஊடக நிறுவனத்தினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதனாலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது இராஜினாமாக் கடிதத்தினையும் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார். 

ஜோடிகள் முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் திருமணமானவர்களில் 5-ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை.

அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது.

இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்து இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது. 

Thursday, August 4, 2011

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஹர்பஜன் விலகல்

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் பார்ம் இன்றி தவித்தார் ஹர்பஜன். டிரெண்ட்பிரிட்ஜ்ஜில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம்பட்டது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமாக இரண்டு விக்கெட்களே சாய்த்தார் ஹர்பஜன். ட்ரெண்ட்பிரிட்ஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒன்பது ஓவர்களே வீசினார்.
ஆனால் துடுப்பெடுத்தாடும் போது 46 ரன்கள் சேர்த்தார். எனவே அவரது உடற்காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு காயம் பட்டிருக்கிறது என்றும் அவர் 10லிருந்து 12 நாட்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்லும் இந்திய கிரிக்கட் ரசிகர்கள் ஹர்பஜன் மிகவும் மோசமான பார்ம் காரணமாக விலக்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பை அவர் வீணடித்துவிட்டார் என்கின்றனர்.

வைரத்தின் மீது தனி பிரியம்: காஜல் அகர்வால்


தமிழ், தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால்.
இந்தியிலும் நடிக்கிறார். மும்பையில் நடந்த சர்வதேச நகை கண்காட்சிக்கு காஜல் அகர்வாலை விழாக்குழுவினர் அழைத்தனர்.



அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் விதவிதமான நகைகளை அணிந்து மேடையில் நடந்தார்.
கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்து காஜல் கூறியதாவது:- நகை கண்காட்சியில் நகைகளை அணிந்து நடந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இதற்காக பயிற்சி எடுக்கவில்லை. சென்னையில் இருந்து வந்து இறங்கியதும் இதில் பங்கேற்றேன். நகைகளில் எனக்கு வைர நகைகளை பிடிக்கும். குறிப்பாக வைர மோதிரம் அணிய ரொம்ப ஆர்வம்.
எனக்கு வைர மோதிரம் ஒன்றை எனது தந்தை பரிசாக கொடுத்துள்ளார். அதை எப்போதும் அணிகிறேன்.
என் தந்தை பரிசாகக் கொடுத்த காரணத்தால், அந்த மோதிரத்தை எப்போதும் கழட்டாமல் அணிந்து வருகிறேன்.

Wednesday, August 3, 2011

நாளை பிறந்த நாளை கொண்டாட இருக்கும் என் அன்பு நண்பனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..............​..................


கண்ணில் காண்பதெல்லாம் நனவென்று நம்பாதே... 
காணாத கனவுகளும் நனவாகிப் போகலாம்... 
நிகழ்கால நிழலில் மட்டும் ஓய்வெடுக்க எண்ணாதே... 
எதிர்கால மர நிழலில், இறந்த காலத் தென்றல் காற்றின் இதமான அரவணைப்பில் சுகமாக ஓய்வெடு... 

கண்களை மூடித் திறக்குமுன், உன் கற்பனையைத் திறந்துவிடு.. 

பூக்களின் வாசனையை நுகர்வது தவறல்ல...அதிலுள்ள முட்களின் வேதனையையும் புரிந்துகொள்.. 
புன்னகையே வாழ்க்கையல்ல..பூகம்பமும் வரும்; புரிந்துகொள்... 


மற்றவன் கண்களில் தெரிவது கண்ணீரென்று மட்டும் எண்ணாதே, 
அது விஷமாகவோ; கேலியாகவோ; ஏன் உனக்கெனவே செய்த புதை குளியாகவும் இருக்கலாம்.... 
இது "நீ".. 
உனக்கென ஒரு பாதை.. 
உனக்கென ஒரு பயணம்.. 
உன்னோடு சில பயணிகள்.. 
தேர்வு உன் கையில்... 

இது நீ "பிறந்த நாள்" அல்ல.. 
உன்னை நன்கு ஒரு முறை "உணர்ந்த நாள்" ஆயின்... 
உன்னை எண்ணிப் பூரிப்பாதில் நானும் ஒருவன் 

பல்லாண்டு காலம் வாழ்க... 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

தோழியா இல்லை காதலியா?

உயிர் பிரிந்து போகும் போது உயிராய் வந்தவளே 
மனமுடைந்து போகும் போதெலாம் மருந்தாய் ஆனவளே 
சிறகிழந்து நிற்கையில சிறகு தந்தவளே 
நிலையிழந்த போது நினைவு தந்தவளே 
தோற்கும் போதெல்லாம் தோள் தந்தவளே
 
எனக்காக நீ அழும்போது எனக்குள்ளே ஒரு கேள்வி 
நீ என் தோழியா இல்லை காதலியா?






கடற்கரை நாம் சென்று கட்டிய மணல் வீடு
ஓடை எங்கும் ஓடிவிளையாடி
உல்லாசமாய் திரைப்படம் பார்த்து
ஓரக்கண்களால் உயிர் தடவி
விடைபெறும் போது விழி கலங்குதே?
நீ என் தோழியா இல்லை காதலியா?
பசியோடு நான் இருந்தால்
பரிவோடு நீ நோக்கி
அன்போடு எனக்கு ஊட்டி
அம்மாவாய் ஆனவளே
அன்போடு அரவணைத்த நீ எந்தன்
தோழியா இல்லை காதலியா?

2011 Our Staff Calender Slideshow

2011 Our Staff Calender Slideshow: "TripAdvisor™ TripWow ★ 2011 Our Staff Calender Slideshow ★ to Batticaloa. Stunning free travel slideshows on TripAdvisor"