Monday, October 17, 2011

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் தீமிதிப்பு உற்சவம்

ற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் மாருதசேன அரசனின் மகன் எதிர்மன்னசிங்கம் என்னும் அரசன் மட்டக்களப்புப் பிரதேசத்தை சம்மாந்துறை என்னும் இடத்தில் இராஜதானியாக அமைத்து திக்காதிபதிகளை நியமித்து ஆட்சி புரிந்து வந்தான்.
அக்கால கட்டத்தில் வட நாட்டில் உள்ள கொங்கு நகரிலிருந்து வைசிய குலத்தைச் சேர்ந்த தாதன் என்னும் விஷ்ணு பக்தர் இலங்கையில் உள்ள புனிதத் தலங்களான திருக்கேதீஸ்வரம், திருக் கோணேஸ்வரம், கதிர்காமம் போன்ற தலங்களை தரிசிக்கும் நோக்கத்தோடு வந்து தரிசித்த பின் அந்த ஆலயங்களில் தங்கி பஞ்ச பாண்டவர்களுடைய வரலாற்றைப் பாடிக்காட்டிய பின்னர் கதிர்காமத்துக்கும் சென்று வழிபட்டு பாண்டவர் வரலாற்றைப் பாடிக்காட்டி குமணை வழியாக நாகர்முனை என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலை வந்தடைந்தார்.

திருக்கோயில் முருகன் ஆலயத்தினைப் பரிபாலிப்பதற்குச் சென்ற திக்காதிபதியாக இருந்த நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வீமாப்போடி என்பவரிடம் தாதன் கொண்டு வந்த மஹாபாரத வரலாற்றைப் பாடிக்காட்டி பக்தர்களைப் பரவசப்படுத்திய தன்மையைக் கண்ட திக்காதிபதி வீமாப்போடி அவர்கள் அவரை அணுகி குசலம் விசாரித்து தனது பகுதியில் திரெளபதை அம்மன் ஆலயம் அமைத்து மஹாபாரத்தின் சிறப்புகளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைக ளையும் விளக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டதன் பிரகாரம் தாதன் மனமகிழ்ச்சியோடு அம்மனின் ஆலயம் அமைய வேண்டிய இடத்தை தெரிவு செய்யும்படி விமாப்போடி திக்காதிபதியை வேண்ட அவரும் மனமகிழ்வு கொண்டவராய் கடலை அண்டயதும், ஆல், அரசு, கொடிகட்டி போன்ற மரங்கள் அடர்ந்து காணப்பட்ட ஆலஞ்சோலை என்னும் இடத்தை (தற்போதைய பாண்டிருப்புக் கிராமம்) தெரிவு செய்து கொடுத்தார். பாண்டவர்களுக்கும், திரெளபதை தேவிக்கும் ஆலயம் அமைக்கப் பட்டதனாலேயே பாண்டிருப்பு என்ற பெயர் வந்தது.
அவ்விடத்திலேயே இருந்த கொக்கட்டிய மரத்தடியில் அட்ஷரத்தைப் பதிந்து திரெளபதை அம்மன் சிலையையும், விஷ்ணு சிலையையும் வைத்து வணக்க முறைகளைக் கொண்டு வணங்கி பூசைகளையும் நடாத்தினார். தாதன் வகுத்த பூசைகள் வருடம் ஒருமுறை பதினெட்டு நாட்கள் புரட்டாதி மாதம் வரும் அமாவாசையில் வரும் செய் வாய்க்கிழமை அல்லது அமாவா சையை அண்டி வரும் செவ்வாய்க் கிழமை கொடியேற்றி பதினெட்டாவது நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு நடைபெறும்.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவத்திலே ஏழாம் நாள் பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத் திலிருந்து கிருஷ்ண பகவானை எழு ந்தருளப் பண்ணுதலும், பன்னிரெண்டாம் நாள் கலியாணக்கால் வெட்டுதல், பண்டிருப்பு வடக்கில் முஸ்லிம்கள் செறி ந்து வாழும் மருதமுனைக்கு அருகா மையில் இருக்கும் கொல்ஸ்தாப்பர் வளவிலிருந்து மேற்படி கலியாணக்கால் வெட்டிக்கொண்டு வருவது சிறப்பான நிகழ்ச்சியாகும். மேற்படி நிகழ்வின் போது தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றி ணைந்து சிறப்பிப்பது விஷேட அம் சமாகும்.
பதின்மூன்றாம் நாள் தோரண அலங்காரப்பூசைகளையும் பதிநான்காம் நாள் மஹாவிஷ்ணுவை தோத்திரம் செய்யும் பூசையும், பதினாறாம் நாள் புதன்கிழமை வனவாசம் செல்லும் நிகழ்ச்சியும் இடம்பெறும். பதினேழாம் நாள் அருச்சுனர் சிவபெருமானைத் தியானித்து தவம்செய்து பாசுபதாஸ்திரம் பெற்றுவர தவத்திற்குப் போகும் நிகழ்ச்சி இடம்பெறும். பதினெட்டாம் நாள் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் கடலில் குளித்து மஞ்சள் பூசி தீக்குளியை வலம்வந்து கமுகம்பூ, அரிசி கலந்து அக்கினியில் இட்டு தருமர், பூசகர் ஏனைய கொலுவிருக்கும் அனைவரும் தீமிதிக்கும் வைபவம் பார்ப்போர் மனதில் பக்திப் பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும். இவ்வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இல ங்கையின் பலபாகங்களிலும் இருந்து வந்து கலந்து அம்மனின் அருள்பெற்றுச் செல்வார்கள்.
பத்தொன்பதாம் நாள் சனிக்கிழமை பால் வார்ப்பு நிகழ்ச்சி இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மகாவிஷ்ணு மீண்டும் எழுந்தருளி நகர்வலம் வந்து ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடையும் நிகழ்ச்சி இடம்பெறும் இந்தப் பதினெட்டு நாட்களும் மகாபாரத பாராயணம் அறிஞர்களால் நடாத்துதல் விசேட அம்சமாகும்.
 

Thursday, September 8, 2011

தடம் மாறிப் போகாது என் காதல்................


உடல்களை பிரிந்து
உயிர்களை வதைக்கும் போது
ஊமையாய் அழுகிறது பார்வதியை
பிரிந்த தேவதாஷைப்போல்
உன்னையும் என்னையும்
விலக்கிவிட நினைக்கும்
உன் உறவுகளை நினைத்து
ஊமையாய் அழுகிறது நம் காதல் செடி
அன்பு கொண்ட உள்ளங்களை
அந்தஸ்து மறைக்கலாம் ஆனால்
உயிரால் செதுக்கி வைத்த உண்மை
காதலை மனசை விட்டு மறைக்கலாமா?
காதலின் வலி என்னவென்று
கண்ணீரை கேட்டுப்பார்த்தேன்
விழிகளும் ஒட்டிப் போனது
என் விழி நீரும் வற்றி போனது
நினைத்துவிட்ட காதலை புதைத்து
விடச்சொன்னால் புண்படுகிறது நெஞ்சம்
ஈட்டியாய பாயும் ஈசல்களை நினைத்து
கண்ணீராய் பாய்கிறது நேசம்
உன் இதயம் இடம் விட்டு சென்றாலும்
தடம் மாறிப் போகாது புடம் போடும்
என் காதல் என் தேவியே..

Thursday, August 11, 2011

ஒரு நட்பின் புன்னகைக்கு உதடுகள் தேவையில்லை இதயம் போதுமே!!!



அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை
நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட .................

Monday, August 8, 2011

சிந்திக்க சில துளிகள்.....

















நண்பர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்....